தேனி

ஹைவேவிஸ் மலைச்சாலையில் பேருந்து மோதி கொத்தனார் சாவு

DIN

தேனி  மாவட்டம் ஹைவேவிஸ் மலைச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை பைக் மீது தனியார் பேருந்து மோதியதில் கொத்தனார் ஒருவர் சம்பவயிடத்திலே உயிரிழந்தார். 
கம்பத்தை சேர்ந்த  பழனிச்சாமி மகன் அனிதாஸ் (32), கொத்தனார் வேலை செய்து வந்தார். இவர் தனது நண்பர்களுடன் ஹைவேவிஸ் மலைப்பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளார். மேகமலை அருகே  மகாராஜாமெட்டிலிருந்து சின்னமனூரை நோக்கி சென்ற தனியார் பேருந்து, அனிதாஸ் ஓட்டி சென்ற பைக் மீது  மோதியது. இதில்  படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலே உயிரிழந்தார். 
மேலும் ஈஸ்வரன் மகன் அபிமன்யூ (18) பலத்த  காயமடைந்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து ஹைவேவிஸ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தனியார் பேருந்து ஓட்டுநரை  கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT