கம்பம் அருகே முல்லைப் பெரியாற்றில் இறங்கினார், கம்பராயப்பெருமாள்
கம்பம் அருகேயுள்ள சுருளிப்பட்டி முல்லை பெரியாற்றில் ஸ்ரீதேவி ,பூதேவியுடன் சமேத கம்பராயப் பெருமாள் கள்ளழகர் கோலத்தில் இறங்கினார்.
கம்பம் அருகேயுள்ள சுருளிப்பட்டி முல்லை பெரியாற்றில் ஸ்ரீதேவி ,பூதேவியுடன் சமேத கம்பராயப் பெருமாள் கள்ளழகர் கோலத்தில் இறங்கினார்.
கம்பத்தில் ஸ்ரீகம்பராயப் பெருமாள் மற்றும் காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. இங்கிருந்து திங்கள்கிழமை, கருடாழ்வார் வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கம்பராயப்பெருமாள் கள்ளழகர் கோலத்தில் காந்தி சிலை வழியாக சுருளிப்பட்டி சாலையில் ஊர்வலமாக சென்று சுருளிப்பட்டி முல்லை பெரியாற்றில் இறங்கினார். பக்தர்கள் ஆராட்டு செய்து ஊர்வலமாக அழைத்து வந்து
காந்தி சிலை அருகேயுள்ள திருமணமண்டபத்தில் வைத்து பால், பன்னீர், தேன், பூ, இளநீர் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து கம்பம் வனச்சரகர் அலுவலக சாலையில் உள்ள பள்ளிகொண்டபெருமாள் கோயிலுக்கு அழைத்து சென்று பூஜைகள் செய்தனர்.
பின்னர் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்த கம்பராயப்பெருமாள் கோயிலை வந்தடைந்தார். நிகழ்ச்சியில் நாட்டாண்மை திருமலைப்பிள்ளை அன்னதான டிரஸ்ட் தலைவர் அப்பாச்சி ராஜ்குமார், செயலர் ஹரிகரன், பொருளாளர் திருக்குமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.