கும்பக்கரை அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை
கும்பக்கரை அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறையினர் புதன்கிழமை முதல் தடை விதித்துள்ளனர்.
கும்பக்கரை அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறையினர் புதன்கிழமை முதல் தடை விதித்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சுமார் 7 கி.மீ. தூரத்தில் கும்பக்கரை அருவி உள்ளது. இங்கு தமிழ்நாடு மற்றும் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான சுற்றுலாபயணிகள் அருவிக்கு வந்து செல்கின்றனர். கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்யும் மழைநீர் ஒடைகளின் வழியாக கும்பக்கரை அருவிக்கு வருகிறது.
இந்த நிலையில் கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த 20 நாள்களுக்கு மேலாக மழை இல்லை.இதனால் அருவியில் நீர் படிப்படியாக குறைந்து புதன்கிழமை முதல் நீர் வரத்து நின்று விட்டது. இதனால் அருவியில் குளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே புதன்கிழமை காலை முதல் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.மேலும் நீர் வரத்து ஏற்படும் வரை அருவியில் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே மீண்டும் அறிவிக்கும் வரை அருவிக்கு செல்ல வேண்டாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.