முகப்பு
தேனி

தேவாரத்தில் சிறுமியை கடத்தியவர் கைது

தேவாரத்தில் ஞாயிற்றுக்கிழமை, சிறுமியை கடத்திச் சென்று காயம் ஏற்படுத்தியதாக 17 வயது சிறுவனை போலீஸார் கைது செய்தனர். மேலும் இப்பிரச்னை தொடர்பாக நடைபெற்ற மறியலின் போது அரசுப் பேருந்து

Updated On : 15 மே, 2018 at 12:45 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

தேவாரத்தில் ஞாயிற்றுக்கிழமை, சிறுமியை கடத்திச் சென்று காயம் ஏற்படுத்தியதாக 17 வயது சிறுவனை போலீஸார் கைது செய்தனர். மேலும் இப்பிரச்னை தொடர்பாக நடைபெற்ற மறியலின் போது அரசுப் பேருந்து கண்ணாடியை உடைத்தவரும் கைது செய்யப்பட்டார்.
தேவாரம் சாலைத் தெருவைச் சேர்ந்தவர் அன்பு (38). கூலித் தொழிலாளி. இவர் தனது மனைவியுடன் கூலி வேலைக்கு சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை வீடு திரும்பியபோது இவர்களது 5 வயது மகளை காணவில்லையாம். அக்கம் பக்கம் தேடிய போது இதே தெருவைச் சேர்ந்த 17 வயது சிறுவன் சிறுமியை கடத்திச் சென்றது தெரிந்தது. மேலும் அந்த சிறுவன், சிறுமியை மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்து விட்ட போது, சிறுமிக்கு உடல் முழுவதும் காயங்கள் இருந்தனவாம். இதுகுறித்து சிறுமியின் தந்தை அன்பு, தேவாரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் காவல் சார்பு- ஆய்வாளர் அப்துல் ரஹ்மான் மற்றும் போலீஸார் வழக்குப் பதிந்து சிறுவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.
மறியல்: இதனிடையே சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், அதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சிறுமியின் தந்தை அன்பு மற்றும் சிலர் தேவாரம் காவல் நிலையம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த போடி அரசுப் பேருந்தின் மீது கல் வீசப்பட்டதில் முன்பக்க கண்ணாடி உடைந்தது. இந்நிலையில் போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக சிறுமியின் தந்தை அன்பு மற்றும் சிலர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் பேருந்து கண்ணாடியை உடைத்து பொது சொத்துக்கு சேதம் விளைவித்ததாக தேவாரத்தை சேர்ந்த மணிகண்டன் (35) என்பவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.