முகப்பு
தேனி

கம்பம் அருகே தனியார் நிறுவன ஊழியர் விஷம் குடித்து தற்கொலை

கம்பம் அருகே தனியார் நிறுவன ஊழியர் ஞாயிற்றுக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Updated On : 22 மே, 2018 at 12:29 AM
பகிர்:

கம்பம் அருகே தனியார் நிறுவன ஊழியர் ஞாயிற்றுக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ளது சாமாண்டிபுரம். இந்த ஊரைச் சேர்ந்தவர் ரவி மகன் தினேஷ்குமார்(22). பட்டதாரியான இவர் கோயம்புத்தூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.
விடுமுறையில் ஊருக்கு வந்தவர் ஞாயிற்றுக்கிழமை நண்பர்களை பார்த்துவிட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு வெளியே சென்றாராம். இரவு வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர், தினேஷை காணவில்லை.
இந்நிலையில் திங்கள்கிழமை சின்னவாய்க்கால் கரையில் உள்ள பிள்ளையார் கோவில் அருகே விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அந்த வழியே சென்றவர்கள் தினேஷ் வீட்டாருக்கு தகவல் தெரிவித்து விட்டு, கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தினேஷ்குமார் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கம்பம் தெற்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.