முகப்பு
தேனி

தேவதானப்பட்டியில் மயானத்துக்கு இடம் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

தேனியில் தேவதானப்பட்டியில் அருந்ததியர் இன மக்களுக்கு மயானத்துக்கு இடம் வழங்கக் கோரி திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 22 மே, 2018 at 12:31 AM
பகிர்:

தேனியில் தேவதானப்பட்டியில் அருந்ததியர் இன மக்களுக்கு மயானத்துக்கு இடம் வழங்கக் கோரி திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி, பங்களாமேடு திடலில் புரட்சிப் புலிகள் அமைப்பின் சார்பில் நடைபெற்ற இந்த
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலர் கருப்பையா பகடை தலைமை வகித்தார். பொதுச் செயலர் க.திலீபன் முன்னிலை வகித்தார்.
தேவதானப்பட்டியில் அருந்ததியர் இன மக்கள் பெருவாரியாக வசித்து வரும் டி.வி.நகர் பகுதியில், அம்மக்களின் பயன்பாட்டிற்கு மயானத்துக்கு இடம் வழங்க மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.