தேனி

கம்பம், குமுளி பேருந்து நிலையங்களில் 502 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

DIN


தேனி மாவட்டம், குமுளி மற்றும் கம்பம் பேருந்து நிலையங்களில் இருந்து கேரளத்துக்கு கடத்த முயன்ற 502 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை வருவாய்த் துறை பறக்கும் படை அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.
தேனி மாவட்ட ஆட்சியர் ம. பல்லவி பல்தேவ் உத்தரவுப்படி, மாவட்ட வருவாய்த் துறை உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு தனிப்பிரிவு அலுவலர் கா. ஜாஹீர் உசேன், வருவாய் ஆய்வாளர் எஸ். பாலசுப்பிரமணியன் மற்றும் ஊழியர்கள் திங்கள்கிழமை அதிகாலை குமுளிக்கு வந்த பேருந்துகளை சோதனையிட்டனர். அதில், ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது கண்டறியப்பட்டது.
இதேபோல், கம்பம் பேருந்து நிலையத்திலிருந்து கேரளத்துக்குச் செல்லும் பேருந்துகளில் ஏற்றுவதற்காக ரேஷன் அரிசி மூட்டைகள் வைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
அவற்றை, தனிப்பிரிவு படையினர் பறிமுதல் செய்து, அரசு கிட்டங்கியில் ஒப்படைத்தனர். மேலும், கேரளத்துக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்றவர்களை தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT