தேனி

சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

DIN

கஜா புயல் காரணமாக  தேனி மாவட்டம் கம்பம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்த தொடர்மழை காரணமாக சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் வெள்ளிக்கிழமை தடை விதித்தனர்.
தேனிமாவட்டம் கம்பம், கூடலூர், ராயப்பன்பட்டி, குமுளி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கஜா புயல் எதிரொலியாக வெள்ளிக்கிழமை அதிகாலையில் இருந்தே  மழை பெய்தது. தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 
இதனால் கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் வெள்ளிக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.  இதனையடுத்து மேகமலை  வன உயிரின சரணாலயத்தினர், வெள்ளிக்கிழமை மதியம் 12 மணி முதல் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கத் தடை விதித்தனர். கம்பம், கூடலூர் பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 11 மணி  மாலை 4 மணி வரை மின்சார விநியோகம் தடைபட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT