தேனி

கருநாக்கமுத்தன்பட்டியில் சுகாதாரப் பணிகள் முகாம்

DIN

தேனி மாவட்டம் கம்பம்  ஒன்றியம் கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சியில் வியாழக்கிழமை ஒட்டு மொத்த சுகாதார பணிகள் முகாம் நடைபெற்றது.
காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினர் நடத்திய இந்த முகாமில், முதல்கட்டமாக தூய்மை பணியாளர்கள் மூலம் குப்பைகள் அகற்றப்பட்டன. குடிநீர் தொட்டிகளில் அபேட் மருந்து தெளித்து கொசுக்களை அழிக்க புகை மருந்து தெளிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. நெகிழி பொருள்கள் பயன்படுத்தக் கூடாது என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. முகாமில் மாவட்ட பூச்சியியல் நிபுணர் தெய்வேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் சேகர், மருத்துவ அலுவலர் சசிதீபா, சித்த மருத்துவர் சிராஜ்தீன்  உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் ஈஸ்வரன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

SCROLL FOR NEXT