தேனி

சின்னமனூர் அருகே அடிப்படை வசதியில்லாத சமத்துவபுரம்

DIN

சின்னமனூர் அருகே சீலையம்பட்டி சமத்துவபுரத்திற்கு செல்லச் சாலை  உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி அப்பகுதி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.        
 தேனி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட சீலையம்பட்டி அருகே  வேப்பம்பட்டி - பூமலைக்குண்டு சாலையில்   2010-11 ஆண்டு தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரம் கட்டப்பட்டது. இங்கு 100 குடியிருப்புகள் உள்ளன. அப்பகுதியில் குடிநீர், மின்சாரம், சாலை வசதி, ரேஷன் கடை என எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி  பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
  இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், சீலையம்பட்டியில்  இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் சமத்துவபுரம் அமைந்துள்ளது. 
   இந்த பகுதிக்கு பேருந்து வசதி, சாலை வசதி, குடிநீர் , மின்சார வசதி, ரேஷன் கடை என எவ்வித அடிப்படை வசதியும் இல்லை.  பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 8 மாதங்களாக சரளை கற்களாக இருந்த சாலையானது,  தற்போது மண் சாலையாக மாறியுள்ளது.  
 இது தார்ச் சாலையாக மாறவேண்டும் எனவும், சமத்துவபுரத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் முழுமையாக  கிடைக்க வேண்டும் என்ற  எதிர்பார்ப்போடு  காத்து கிடப்பதாக   தெரிவித்தனர்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

SCROLL FOR NEXT