தேனி

பாஜகவினர் தர்னா போராட்டம்

DIN

தேனி மாவட்டம், சின்னமனூரில் பாஜக நிர்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி, மார்க்கையன்கோட்டை ரவுண்டானா பகுதியில் வைக்கப்பட்டிருந்த வாழ்த்துப் பதாகையை காவல் துறையினர் அகற்றினராம். அப்போது பதாகைகள் கிழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த பாஜக நிர்வாகிகள், அங்கு திரண்டனர். மேலும், அவர்கள் பதாகையை மீண்டும் வைக்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். 
பின்னர், சாலையில் அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தகவலறிந்த சின்னமனூர் சார்பு ஆய்வாளர் முத்துப்பாண்டி, அங்கு வந்து அகற்றப்பட்ட பதாகைகளை மீண்டும் வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார். அதைத்தொடர்ந்து, பாஜகவினர் போராட்டத்தை கைவிட்டு  கலைந்து சென்றனர்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

75 வயது முதியவா் மீண்டும் பிரதமராக வேண்டுமா? லாலு மகள் மிசா பாரதி பிரசாரம்

வரத்துக் குறைவால் பூண்டு விலை அதிகரிப்பு!

தூத்துக்குடியில் தீத்தடுப்பு, தொழிற்சாலைகள் பாதுகாப்புக் குழு ஆலோசனைக் கூட்டம்

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

கொளுத்தும் வெயில்..!

SCROLL FOR NEXT