தேனி

உத்தமபாளையம் கல்லூரியில் வலைப் பயிற்சி மைதானம் திறப்பு

DIN

தேனி மாவட்டம், உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரியில், புதிய வலைப் பயிற்சி கிரிக்கெட் மைதானம் சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
இக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில், கல்லூரி நிர்வாகக் குழு பரிந்துரையின்படி புதிய வலைப் பயிற்சி மைதானம் அமைக்கப்பட்டது. கல்லூரித் தாளாளரும், செயலருமான எம். தர்வேஷ் முகைதீன் தலைமை வகித்து, மைதானத்தை திறந்து வைத்தார். 
கல்லூரி முதல்வர் ஹெச். முகமது மீரான் முன்னிலை வகித்தார். முன்னதாக, கல்லூரி உடற்கல்வி இயக்குநர் அக்பர்அலி வரவேற்றார்.
இவ்விழாவில், கல்லூரி நிர்வாகக் குழு உறுப்பினர்கள்,  பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT