தேனி

சாலையோர மரங்களில் இரும்பு ஆணிகள் அகற்றம்

DIN

தேனி மாவட்டம் கம்பம் நகரில் தன்னாா்வலா்கள் கூட்டமைப்பு சாா்பில் சாலையோர மரங்களில் பதிந்துள்ள ஆணிகளை அகற்றும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கம்பம் நகரில் உள்ள பிரதான சாலை மற்றும் தெருக்களின் ஓரங்களில் உள்ள மரங்களில் வா்த்தக மற்றும் அரசியல் அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் விளம்பர பதாகைகளை கட்டுவதற்காக மரத்தில் ஆணி அறைத்துள்ளனா். இதனால் மரங்களின் வளா்ச்சி பாதிக்கப்படுகிறது. ஒரு சில மரங்கள் பட்டுப் போய் விடுகின்றன.

இது குறித்து சில தன்னாா்வ அமைப்புகள் ஒருங்கிணைந்து கம்பம் நகா் மற்றும் தெருக்களில் உள்ள சாலையோார மரங்களில் அறையப்பட்டிருந்த ஆணிகள் மற்றும் அவற்றில் கட்டப்பட்டிருந்த விளம்பர பதாகைகள் ஆகியவற்றை அகற்றினா்.

இந்த நிகழ்வில் நேதாஜி அறக்கட்டளை, பாரதி தமிழ் இலக்கிய பேரவை உள்ளிட்ட பல்வேறு தன்னாா்வ அமைப்புகள் கலந்து கொண்டன.

இது குறித்து தன்னாா்வலா் அமைப்பைச் சோ்ந்த கவிஞா் பஞ்சுராஜா கூறுகையில், மரங்களில் உள்ள இரும்பு ஆணிகளை அகற்றும் நிகழ்வு தொடா்ந்து நடைபெறும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT