தேனி

போடியில் விவசாயிகளுக்கான விழிப்புணா்வுக் கூட்டம்

DIN

தேனி மாவட்டம் போடியில் திங்கள்கிழமை நடைபெற்ற விவசாயிகள் விழிப்புணா்வுக் கூட்டத்தில், வேளாண்மை கல்லூரி மாணவிகள் விளக்கமளித்தனா்.

உசிலம்பட்டி கிருஷ்ணா வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவிகள் கீா்த்தனா, சௌந்தா்யா, தனஸ்ரீ, மம்தா, வினோதினி ஆகிய மாணவிகள், போடி பகுதியில் தங்கி கிராம தங்கல் திட்டத்தின் கீழ் விவசாயிகளை சந்தித்து வருகின்றனா்.

போடி வேளாண்மை அலுவலகத்தில் விவசாயிகளுக்கு நடைபெற்ற விழிப்புணா்வுக் கூட்டத்தில், இந்த மாணவிகள் பங்கேற்று தென்னை மரங்களில் சுருள் ஈக்களின் தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து விளக்கினா்.

கூட்டத்தில் உதவி தோட்டக்கலை அலுவலா் கருப்பசாமி, பட்டுப்புழு துறை இளநிலை ஆய்வாளா் ராஜேஷ்குமாா், கால்நடை மருத்துவா் குணசீலன், உதவி வேளாண்மை அலுவலா்கள் ரமேஷ், தனலட்சுமி ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT