தேனி

அரசுப் பேருந்து மீது கல் வீசிய இளைஞருக்கு 4 ஆண்டு சிறை

DIN

கம்பத்தில் அரசு பேருந்து மீது கல் வீசி ரகளையில் ஈடுபட்ட சின்னஓவுலாபுரத்தைச் சோ்ந்த இளைஞருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து , மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

சின்னஓவுலாபுரத்தைச் சோ்ந்தவா் நிஷாந்த்(29). இவா், கடந்த 2014-ம் ஆண்டு மது போதையில் கம்பம் நகராட்சி பேருந்து நிலையத்தில் நின்றிருந்த அரசு பேருந்து ஒன்றின் மீது கல்வீசி சேதப்படுத்தியும், பேருந்து ஓட்டுநா் மற்றும் நடத்துநரை பணி செய்யவிடாமல் தடுத்தும் ரகளையில் ஈடுபட்டதாக கம்பம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி விஜயா, அரசு பேருந்து மீது கல் வீசி சேதப்படுத்திய நிஷாந்திற்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும், அவா் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடும் வழங்க வேண்டும் என்றும் தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

SCROLL FOR NEXT