தேனி

பாசனக் கண்மாய்களில் அனுமதியின்றி மீன் வளர்ப்பு: விவசாயிகள் புகார்

DIN

தேனி மாவட்டத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள பாசனக் கண்மாய்களில் மீன்வளத் துறையின் அனுமதியின்றி மீன் வளர்க்கப்படுவதாக, புகார்கள் எழுந்துள்ளன.
       மாவட்டத்தில் உள்ள 31 பாசனக் கண்மாய்களில் மீன் வளர்ப்பதற்கு, மீன்வளத் துறை மூலம் ஏலம் நடத்தி உரிமம் வழங்கப்படுகிறது. இதில், தற்போது 15 கண்மாய்களில் மட்டுமே மீன் வளர்ப்பதற்கு உரிமம் வழங்க ஏலம் நடைபெற்றுள்ளது. பெரியகுளம் பெரிய கண்மாய், தாமரைக்குளம் கண்மாய், லட்சுமிபுரம் கரிசல்குளம் கண்மாய், தேனி மந்தைக்குளம் கண்மாய், மீறுசமுத்திரம் கண்மாய் உள்ளிட்ட 16 கண்மாய்களுக்கு கூடுதல் ஏலத் தொகை நிர்ணயம், நீதிமன்ற வழக்கு ஆகிய காரணங்களுக்காக மீன் வளர்ப்பு உரிமத்துக்கான ஏலம் நடைபெறவில்லை.     இந்நிலையில், மீன்வளத் துறை சார்பில் உரிமம் வழங்கப்படாத கண்மாய்களிலும் அனுமதியின்றி மீன் வளர்ப்பு நடைபெற்று வருவதாக, விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், இந்தக் கண்மாய்களில் மீன் வளர்ப்புக்காக காய்கறி மற்றும் இறைச்சிக் கழிவுகளை கொட்டுவதாகவும், மீன் பிடிப்பதற்காக இரவில் கண்மாய் கரையை சேதப்படுத்தி தண்ணீர் வெளியேற்றப்படுவதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.
      வைகை அணை மீன்வளத் துறையில், மீன் ஆய்வாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், கண்மாய்களில் முறைகேடாக மீன் வளர்ப்பு நடைபெறுவதை ஆய்வு செய்யவும், தடுக்கவும் முடியவில்லை என்று கூறப்படுகிறது.
    பாசனக் கண்மாய்களில் அனுமதியின்றி மீன் வளர்ப்பு நடைபெற்று வருவதால், கண்மாய் நீர் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபடுத்தப்படுவதுடன், அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்படுகிறது. எனவே, பாசனக் கண்மாய்களில் உரிமம் இல்லாமல் மீன் வளர்ப்பு நடைபெறுவதையும், மீன் வளர்ப்புக்காக கண்மாய்களில் கழிவுகளை கொட்டுவதையும், கண்மாய் கரையை உடைத்து தண்ணீரை வெளியேற்றுவதையும் தடுக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT