தேனி

பெரியகுளத்தில் 2 ஆவது நாளாக மழை

DIN

பெரியகுளம் பகுதியில் 2 ஆவது நாளாக சனிக்கிழமையும் பெய்த மழையால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
     பெரியகுளம் பகுதியில் கடந்த 3 மாதங்களாக போதிய மழை பெய்யவில்லை. இதனால், கண்மாய் மற்றும் குளங்களில் நீரின்றி வறண்டு, நிலத்தடி நீர்மட்டமும் குறைந்துள்ளது. தற்போது, பகலில் அதிக வெப்பமும் நிலவுகிறது.
    இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு பெரியகுளம் மற்றும் லட்சுமிபுரம் பகுதியில் பரவலாக மழை பெய்தது. தொடர்ந்து, சனிக்கிழமை இரவும் பெரியகுளம், லட்சுமிபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பம் குறைந்து குளுமை நிலவியது.   இதேபோன்று, தொடர்ந்து மழை பெய்தால், கோடை காலத்தில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படாது என, பொதுமக்கள் தெரிவித்தனர். இந்த மழையால், விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT