தேனி கல்லூரியில் அறிவியல் கண்காட்சி
தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், அறிவியல் தின விழா மற்றும் அறிவியல் கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், அறிவியல் தின விழா மற்றும் அறிவியல் கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை பொதுச் செயலர் டி. ராஜமோகன் தலைமை வகித்தார், கல்லூரி முதல்வர் மதளை சுந்தரம், இணைச் செயலர் காசிபிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெங்களூரு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் விண்கல உந்தும வளாக விஞ்ஞானி எஸ். இங்கர்சால் அறிவியல் கண்காட்சியை திறந்து வைத்துப் பார்வையிட்டார். இதில், கல்லூரி மாணவ, மாணவிகளின் 168 அறிவியல் படைப்புகள் இடம்பெற்றன. சிறந்த 3 படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.