தேனி

கம்பத்தில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் கைது

DIN

தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து கேரளாவுக்கு, கஞ்சா கடத்திய பெண்ணை 4 கிலோ கஞ்சாவுடன் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
 தேனி மாவட்டம் கம்பத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு வந்த தகவலின் பேரில்,  கம்பம் கோசந்திர ஓடை பகுதியில் பகுதியில் சிறப்பு சார்பு -ஆய்வாளர் ப.செல்வராஜ் தலைமையில் போலீஸார்  வியாழக்கிழமை ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது  சந்தேகப்படும்படியாக நின்றிருந்த பெண்ணை பிடித்து அவரிடம்  இருந்த பையை சோதனையிட்டனர். அதில் 4 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சாவை கைப்பற்றிய போலீஸார் நடத்திய விசாரணையில், அந்த பெண் மதுரை  கொன்னவாயன் சாலை பகுதியைச் சேர்ந்த வைரமணி, (45) என்பதும், கம்பத்தில் கஞ்சா வாங்கி, கேரளத்துக்கு கடத்துவதற்காக வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கம்பம் வடக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து வைரமணியை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT