தேனி

தேனி மாவட்டத்தில் தேர்தல் பிரசார கூட்டத்துக்கு 135 இடங்கள் நிர்ணயம்

DIN

தேனி மாவட்டத்தில் தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் மற்றும் தெருமுனைப் பிரசாரம் செய்ய 135 இடங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
   தேனி மாவட்டத்தில் தேனி மக்களவை தொகுதி பொதுத் தேர்தல் மற்றும் ஆண்டிபட்டி, பெரியகுளம் சட்டப் பேரவை தொகுதிகளின் இடைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடத்துவதற்கு ஒற்றை சாளர முறையில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அரசியல் கட்சிகள் சார்பில் பொதுக் கூட்டம் மற்றும் தெருமுனைப் பிரசாரத்துக்கு தேனி வட்டாரத்தில் 24 இடங்கள், போடி வட்டாரத்தில் 41 இடங்கள், உத்தமபாளையம் வட்டாரத்தில் 43 இடங்கள், ஆண்டிபட்டி வட்டாரத்தில் 14 இடங்கள், பெரியகுளம் வட்டாரத்தில் 13 இடங்கள் உள்பட மொத்தம் 135 இடங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.       வேட்பாளர் மற்றும் அரசியல் கட்சிகள் அனுமதி பெற்றும், தேர்தல் விதிகளுக்கு உள்பட்டும், நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் மட்டும் பொதுக் கூட்டம் மற்றும் தெருமுனைப் பிரசாரம் செய்ய வேண்டும் என்று காவல் துறை அதிகாரிகள் கூறினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT