தேனி

கணவன்-மனைவியிடையே பிரச்னை: 3 பேருக்கு கத்திக் குத்து; இருவர் மீது வழக்கு

DIN

போடி அருகே திங்கள்கிழமை இரவு கணவன்-மனைவி இடையே எழுந்த பிரச்னையில் 3 பேரை கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் மீது, போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
        போடி மேலச்சொக்கநாதபுரம் காந்திஜி காலனியை சேர்ந்தவர் பரமசிவம் (60). இவரது அண்ணன் மகன் கோபி என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (47) மகள் மம்தா என்பவருக்கும் 9 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், இருவருக்கும் அவ்வப்போது குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், பரமசிவம் தலையிட்டு சமாதானப்படுத்தி வந்துள்ளார். 
      சில தினங்களுக்கு முன் மீண்டும் இருவருக்குமிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறின்போது, பரமசிவம் சமாதானப்படுத்தியும் ஏற்காத மம்தா கோபித்துக் கொண்டு  தனது தந்தை வீட்டுக்குச் சென்றுவிட்டாராம். 
  இந்தப் பிரச்னைகளுக்கு காரணம் பரமசிவம் தான் எனக் கருதிய ரமேஷ், தனது உறவினர் சரவணக்குமாருடன் (36) சேர்ந்து பரமசிவம் வீட்டுக்குச் சென்று தகராறு செய்து, அவரைக் கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளனர். மேலும், சண்டையை விலக்க வந்த பரமசிவத்தின் மனைவி சுருளியம்மாள், மகன் மணிமுத்து ஆகியோரும் கத்தியால் குத்தப்பட்டு காயமடைந்தனர். 
      காயமடைந்த 3 பேரும் போடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து போடி தாலுகா காவல் நிலையத்தில் பரமசிவம் அளித்த புகாரின்பேரில், ரமேஷ் மற்றும் சரவணக்குமார் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல்

வாக்குப்பதிவு இயந்திர மையங்கள் அருகே ட்ரோன் பறக்கத் தடை கோரி திமுக மனு

அதிமுக தண்ணீா் பந்தல் திறப்பு

காா் மோதி பெண் உயிரிழப்பு

பிரதமா் மோடியை எதிா்த்து 111 விவசாயிகள் வேட்புமனு: அய்யாக்கண்ணு அறிவிப்பு

SCROLL FOR NEXT