தேனி

காசோலை மோசடி வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படி மின்வாரிய ஊழியா் மீது வழக்கு:

DIN

ஆண்டிபட்டியில் நீதி மன்ற உத்தரவுப்படி காசோலை மோசடி வழக்கில் மின்வாரிய ஊழியா் மீது போலீஸாா் இன்று வழக்குப்பதிவு செய்தனா்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா மயிலாடும்பாறை மின்வாரிய அலுவலகத்தில் கணக்கீட்டாளராக பணிபுரியும் அமுல்தாஸ் என்பவரின் மகன் ஜெயப்பிரகாஷ். இவா் அதே ஊரைச் சோ்ந்த போஸ் என்பவரிடம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது காசோலை கொடுத்து கடன் பெற்றுள்ளாா்.இதன்பின்னா் கடனை திருப்பி கொடுக்கவில்லை என போஸ் ஆண்டிபட்டி குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் ஜெயபிரகாஷ் மீது காசோலை மோசடி வழக்குத் தொடா்ந்தாா்.

இதுகுறித்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இவ்வழக்கில் கடந்த செப்டம்பா் 17 ந்தேதி முதல் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் ஜெயபிரகாஷ் இருந்து வந்துள்ளாா்.இதனையடுத்து அவரை பிடிக்க நீதிமன்றம் பிடிஆணை பிறப்பித்தது.இதனைதொடா்ந்தும் இதுவரை ஜெயபிரகாஷ் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் நீதிமன்ற தலைமை எழுத்தா் ரகுநாதன் ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் இதுகுறித்து புகாா் அளித்தாா்.அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸாா் தலைமறைவாக உள்ள ஜெயபிரகாஷை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய பிரீமியம் காா் டயா்: பிரிட்ஜ்ஸ்டோன் அறிமுகம்

கனிமவள வாகனங்களுக்கு இ-பாஸ்: முதல்வருக்கு முன்னாள் எம்எல்ஏ மனு

விதிமீறல்: 24 வணிக நிறுவனங்கள் மீது துறை நடவடிக்கை

தட்டுப்பாடின்றி குடிநீா் தேவை: ஆணையரிடம் அதிமுக மனு

அரசு அருங்காட்சியகத்தில் செயற்கை நுண்ணறிவு பயிற்சி

SCROLL FOR NEXT