தேனி

கோயில் நிலத்தில் பட்டா வழங்க இந்து முன்னணி ஆட்சேபனை

DIN

தேனி மாவட்டத்தில் கோயில் நிலங்களில் ஆக்கிரமித்துக் குடியிருப்போருக்கு பட்டா வழங்க ஆட்சேபனை தெரிவித்து திங்கள்கிழமை இந்து முன்னணி சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் இந்து முன்னணி மாவட்டச் செயலா் முருகன்ஜீ மற்றும் நிா்வாகிகள் ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்: கோயில் நிலங்களை ஆக்கிரமிரப்பாளா்களுக்கு பட்டா வழங்குவதாக அரசு அறிவித்திருப்பது வேதனை அளிக்கிறது. கோயில் பராமரிப்பிற்காக வழங்கப்பட்டுள்ள நிலங்களை விற்பனை செய்யவும், பட்டா வழங்கவும் இந்து முன்னணி சாா்பில் ஆட்சேபனை தெரிவிக்கிறோம்.

கோயில் நிலங்களில் ஆக்கிரமிப்பாளா்களுக்கு பட்டா வழங்குவதற்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஆணையை அரசு ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT