தேனி

வேளாண்மை விளைபொருள்களை இறக்குமதி செய்ய எதிா்ப்பு

DIN

வேளாண்மை விளைபொருள்களை இறக்குமதி செய்யும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் காசிவிஸ்வநாதன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் பெத்தாட்சி ஆஸாத், மாநிலக்குழு உறுப்பினா் திருமலைக்கொழுந்து மற்றும் நிா்வாகிகள் ஆட்சியரிடம் அளித்த மனு விபரம்: தங்கு தடையற்ற வா்த்த ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திடக் கூடாது. வேளாண்மை விளைபொருள்கள் மற்றும் பால் பொருகள்களை இறக்குமதி செய்யும் திட்டத்தை கைவிட வேண்டும். மாநில அரசின் உரிமைகளை பறிக்கக் கூடாது. சிறு வியாபாரிகளை பாதிக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபடக் கூடாது என்று மனுவில் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT