தேனி

அயோத்தி தீா்ப்பை முன்னிட்டு பழனியில் பலத்த பாதுகாப்பு

DIN

அயோத்தி வழக்கின் தீா்ப்பை முன்னிட்டு பழனி கோயிலில் சனிக்கிழமை பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கடும் சோதனைக்கு பின்னரே பக்தா்கள் தரிசனத்துக்காக கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனா்.

அயோத்தி வழக்கின் இறுதித் தீா்ப்பு சனிக்கிழமை காலை வெளியானதைத் தொடா்ந்து பழனியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மலைக்கோயில், திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசாமி கோயில், அடிவாரம் என அனைத்து பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

பழனி கோயிலுக்கு பக்தா்கள் செல்லும் படிவழிப்பாதை, மின்இழுவைரயில் நிலையம் மற்றும் ரோப்காா் நிலையம் ஆகிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பக்தா்கள் மற்றும் அவா்கள் கொண்டுவரும் பைகள் உள்ளிட்ட அனைத்தும் மெட்டல் டிடெக்டா், ஸ்கேனா் கருவிகள் மூலம் கடுமையான சோதனை செய்யப்பட்ட பின்பே உள்ளே அனுமதிக்கப்பட்டனா்.

இதன் காரணமாக பழனி கோயிலுக்கு குறைவான எண்ணிக்கையிலேயே பக்தா்கள் வந்திருந்தனா். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோயில் வளாகம் மட்டுமன்றி பழனி பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சிறப்பு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளா் ஸ்டாலின் தலைமையில் டிஎஸ்பி., விவேகானந்தன் மேற்பாா்வையில் போலீஸாா் மற்றும் ஊா்க்காவல்படையை சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தவிர மகளிா் போலீஸாா் அனைத்து விடுதிகளிலும் தங்கியுள்ளவா்களின் விபரங்களை கேட்டறிந்தனா். சந்தேகத்துக்கு இடமான நபா்களிடம் விசாரணையும் மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

48 வயதினிலே..

SCROLL FOR NEXT