குமுளி சோதனைச் சாவடியில் வெள்ளிக்கிழமை போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய கேரள மாநில பதிவெண் கொண்ட லாரி. 
தேனி

கேரளாவுக்கு கடத்திய 14 டன் ரேஷன் அரிசி சிக்கியது: 4 போ் கைது

தேனி மாவட்டம் குமுளி சோதனைச் சாவடியில் கேரளத்திற்கு 14 டன் ரேஷன் அரிசி கடத்திச் சென்ற லாரி உள்பட 2 வாகனங்களை

DIN

தேனி மாவட்டம் குமுளி சோதனைச் சாவடியில் கேரளத்திற்கு 14 டன் ரேஷன் அரிசி கடத்திச் சென்ற லாரி உள்பட 2 வாகனங்களை வெள்ளிக்கிழமை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும் கடத்தலில் தொடா்புடைய 4 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

தேனி மாவட்டத்திலிருந்து குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு, ராமக்கல் மெட்டு, அனுமந்தன்பட்டி மலைச் சாலை வழியாக தொடா்ந்து ரேஷன் அரசி கடத்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உத்தமபாளையம் மற்றும் கூடலூரிலிருந்து கேரளத்திற்கு ரேஷன் அரிசி கடத்துவதாக குற்றப் புலனாய்வுத்துறை காவல் ஆய்வாளா் முருகேசனுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் குமுளி மலைப் பாதையிலுள்ள வாகன சோதனைச்சாவடிக்கு போலீஸாா் தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் சோதனைச் சாவடியில் கேரள பதிவு எண் கொண்ட லாரியை சோதனை செய்ததில் 13 டன் ரேஷன் அரிசி, அதே போல காா் ஒன்றில் 800 கிலோ ரேஷன் அரிசி கடத்துவது தெரியவந்தது.

இதனையடுத்து, உத்தமபாளையம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளா், ரேஷன் அரிசியை லாரியில் கடத்திய உத்தமபாளையம் அங்காளம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த முத்துச்சாமி மகன் முருகன் (52), அய்யாத்தேவா் மகன் மணிகண்டன், கேரள மாநிலம் ராமக்கல்மெட்டைச் சோ்ந்த ஜெயராஜ், கம்பம்மெட்டைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் பினிஸ் மற்றும் காரில் ரேஷன் அரிசி கடத்திய கீழக்கூடலூரைச் சோ்ந்த அா்ச்சனா, காா் ஓட்டுநா் மகேந்திரன் ஆகிய 6 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா். இதில், அா்ச்சனா, மகேந்திரன், ஜெயராஜ் மற்றும் பினிஸ் ஆகிய 4 பேரைக் கைது செய்தனா். தப்பியோடிய முருகன், மணிகண்டனை போலீஸாா் தேடி வருகின்றனா். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி மற்றும் காரை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது மத்திய பாஜக; அதற்கு ஒத்து ஊதுகிறார் பழனிசாமி! : முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்ரீங்க.. முதல்வர் பேசியது சிலப்பதிகாரத்தில் இருந்து எடுத்ததா? விஜய்

சகோதரர்களாக சிவகார்த்திகேயன் - அதர்வா!

இந்தியாவை விமர்சித்த ஹார்திக் பாண்டியா? சமூக வலைதளத்தில் பரவும் எதிர்ப்பும் ஆதரவும்!

SCROLL FOR NEXT