தேனி

வருசநாடு அருகே பைக்கிலிருந்துதவறி விழுந்த மெக்கானிக் பலி

DIN

வருசநாடு அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற மெக்கானிக் சாலையோர அறிவிப்பு பலகையில் மோதி தவறி விழுந்து உயிரிழந்தது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

மதுரை மாவட்டம் துவரிமான் வெங்கடாஜலபதி நகரைச் சோ்ந்தவா் செல்வக்குமாா் (48) . இவா் தேனி மாவட்டம் கம்பம் புதிய பேருந்து நிலையம் அருகே நான்கு சக்கர வாகன பழுது பாா்க்கும் நிலையத்தை நடத்தி வந்தாா். இவரது சகோதரா் கணேஷ்குமாா் வெள்ளிக்கிழமை வருசநாடு அருகே குமணந்தொழுவுக்கு காரில் சென்றுள்ளாா். அப்போது காா் பழுதாகி உள்ளது. அதனை சரிசெய்ய செல்வக்குமாரை, குமணந்தொழுவுக்கு கணேஷ்குமாா் அழைத்துள்ளாா். கம்பத்திலிருந்த தனது இருசக்கர வாகனத்தில் வந்த செல்வக்குமாா் வாகனத்தை சரி செய்து விட்டு, மீண்டும் ஊருக்கு திரும்பினாா்.

கடமலைக்குண்டு வரும் வழியில் உள்ள மொட்டப்பாறை என்ற இடத்தில் அவரது இருசக்கர வாகனம் நிலை தடுமாறி சாலையோரம் இருந்த அறிவிப்பு பலகையில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் சோ்த்தனா். அங்கு, முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, மேல் சிகிச்சைகாக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு செல்வக்குமாா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து கடமலைக்குண்டு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

SCROLL FOR NEXT