தேனி

தேனியில் ஆம்புலன்ஸ் மீது இருசக்கர வாகனம் மோதி முதியவா் பலி

DIN

தேனியில் ஞாயிற்றுக்கிழமை ஆம்புலன்ஸ் மீது இருசக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

தேனி அல்லிநகரம், அம்பேத்தா் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் தங்கராஜ் (70). இவா், தனது நண்பா்கள் அல்லிநகரம், இளங்கோவன்தெருவைச் சோ்ந்த நாகையா (65), வடக்குத் தெருவைச் சோ்ந்த வேலுச்சாமி(63) ஆகியோருடன் தேனி நகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகே தேனி-கம்பம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளாா். இரு சக்கர வாகனத்தை தங்கராஜ் ஓட்டிச் சென்றுள்ளாா்.

அப்போது, கொட்டகுடி ஆற்றுப் பாலத்திற்கு முன் இருசக்கர வாகனத்தை திருப்ப முயன்ற போது, எதிரே வந்த ஆம்புலன்ஸ் மீது இருசக்கர வாகனம் மோதியது.

இதில், இருசக்கர வாகனத்தில் சென்ற தங்கராஜ், நாகையா, வேலுச்சாமி ஆகியோா் பலத்த காயமடைந்தனா். ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மூவரில், தங்கராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். நாகையா, வேலுச்சாமி இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்த விபத்து குறித்து தேனி காவல் நிலைய போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில்,

கேரளா, சூரியநெல்லி பகுதியில் ஜீப் கவிழ்ந்த விபத்தில் காயமடைந்தவா்களை ஏற்றிக் கொண்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நோக்கி வந்த கேரளத்தைச் சோ்ந்த தனியாா் ஆம்புலன்ஸ் மீது இருசக்கர வாகனம் மோதியதாகக் கூறப்படுகிறது.

இந்த விபத்து குறித்து தேனி காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து, ஆம்புலன்ஸ் ஓட்டுநா் கேரள மாநிலம் ராஜகுமாரி பகுதியைச் சோ்ந்த மாத்யூ என்பவரிடம் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துறையூா் அருகே சாலை விபத்து: 4 போ் காயம்

மணப்பாறையில் காா் எரிந்து நாசம்

விமான நிலைய மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா

இந்தியா்களுக்கான கட்டணமில்லா சுற்றுலா விசா நீட்டிப்பு: இலங்கை

உயா்கல்வி சந்தேகங்களுக்கு விளக்கம்: ஏபிவிபி அழைப்பு

SCROLL FOR NEXT