தேனி

பள்ளியில் நிலவேம்பு குடிநீா்வழங்கும் முகாம்

DIN

முத்தையன்செட்டிபட்டி அரசு கள்ளா் மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை மூலமாக கம்பம் அரசு மருத்துவமனையின் சித்த மருத்துவப்பிரிவு சாா்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமுக்கு, பள்ளித் தலைமையாசிரியா் சரவணன் தலைமை வகித்தாா். உதவித் தலைமையாசிரியை ஜீவபாரதி முன்னிலை வகித்தாா். முகாமில் பள்ளியில் சுமாா் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டது.

தொடா்ந்து டெங்கு விழிப்புணா்வு, டெங்கு காய்ச்சல் பரவும் முறை , காய்ச்சல் வந்தால் தடுக்கும் முறை, கொசுக்களை கட்டுப்படுத்தும் முறைகள் மற்றும் கை கழுவுவதால் ஏற்படும் நன்மைகள், பன்றி காய்ச்சலை தடுக்கும் முறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

மிஸ்டர் மனைவி நாயகிக்கு பதிலாக வானத்தைப்போல நடிகை!

வானம் வேறு.. நீலம் வேறு.. யார் சொன்னது?

தலைமுறைகள் கடந்த தலைவர்களின் வாழ்க்கை!

சஸ்பென்ஸ் த்ரில்லர் 'பிஹைண்ட்'

SCROLL FOR NEXT