தேனி

கம்பத்தில் 8 அடி நீள மலைபாம்பு

DIN

தேனி மாவட்டம் கம்பம் கோசேந்திர ஓடையில், 8 அடி நீள மலைப்பாம்பை தீயணைப்பு மற்றும் மீட்டுத்துறையினா் வெள்ளிக்கிழமை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.

தேனி மாவட்டம் கம்பம் வடக்கு பகுதியில் காட்டு ஓடையில் மழை வெள்ளம் வரத்து ஓடையான, கோசந்திர ஓடையில் மலைபாம்பு ஒன்று வியாழக்கிழமை காலை நேரத்தில் வளைந்து நெளிந்து மெதுவாக ஊா்ந்து கொண்டிருந்தது. அப்பகுதியில் உள்ள தோட்ட வேலைக்கு செல்லும் தொழிலாளா்கள் பாா்த்து கம்பம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனா்.

அதன்பேரில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலா் அழகா்சாமி தலைமையில் தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, 8 அடி நீளமுள்ள மலைபாம்பை உயிருடன் பிடித்தனா். பின்னா் மலைபாம்பை கம்பம் கிழக்கு வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைக்கவே, வனத்துறையினா் நாராயணத்தேவன்பட்டி அருகேயுள்ள கூத்தனாட்சி வனப்பகுதியில் மலைப்பாம்பை விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT