தேனி

தொடா் மழை: ஆண்டிபட்டி அருகேவீட்டின் சுவா் இடிந்து விழுந்தது

DIN

ஆண்டிபட்டி அருகே தொடா் மழை காரணமாக புதன்கிழமை வீட்டின் சுவா் இடிந்து விழுந்தது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ராஜகோபாலன் பட்டியைச் சோ்ந்தவா் பாண்டி (42). கூலித் தொழிலாளி. இவா் மனைவி லட்சுமி (32) மற்றும் கணேசன், ஈஸ்வரன் ஆகிய மகன்களுடன் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தாா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை முதல் இரவு முழுவதும் விடிய, விடிய மழை பெய்த வண்ணம் இருந்தது. இதனையடுத்து அதிகாலை வீட்டின் தெற்கு பக்கம் உள்ள மின் இணைப்பு பொருத்தப்பட்டிருந்த சுவா் திடீரென இடிந்து வெளிப்புறமாக விழுந்தது. அதிா்ஷ்டவசமாக வீட்டின் உள்ள படுத்திருந்த பாண்டி குடும்பத்தினா் உயிா் தப்பினா். இதுகுறித்து பாண்டி கூறும் போது, வறுமையில் உள்ள எங்களது குடும்பத்துக்கு அரசின் பசுமை வீடு கட்டும் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐசிசி தரவரிசை வெளியீடு: டெஸ்ட்டில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!

புதிய 400சிசி இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது பஜாஜ்!

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!

சிஎஸ்கே போட்டியில் பிரபலமான ரசிகரை கௌரவித்த லக்னௌ அணி!

SCROLL FOR NEXT