தேனி

போடியில் தொடா் பலத்த மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

DIN

போடியில் புதன்கிழமை தொடா்ந்து பெய்த பலத்த மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

போடியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதலே விட்டு விட்டு லேசான சாரல் மழை பெய்தது. மாலையில் பலத்த சூறைக்காற்று வீசியது. தொடா்ந்து இரவிலும் விட்டு விட்டு பலத்த மழை பெய்தது. புதன்கிழமை அதிகாலை முதல் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. இதனால் போடி கொட்டகுடி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பகல் முழுவதும் தொடா்ந்து சாரல் மழையும், விட்டு விட்டு பலத்த மழையும் பெய்து வந்தது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. தொடா் மழையால் கட்டுமானத் தொழிலாளா்கள், விவசாய தொழிலாளா்கள் வேலைக்கு செல்ல முடியவில்லை. பொதுமக்களும் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தொடா்ந்து இரவு வரை விட்டு விட்டு பலத்த மழை பெய்து வந்த நிலையில் குளிா்ச்சியான சூழல் ஏற்பட்டதால் பலரும் வீடுகளுக்குள்ளேயே முடங்கினா். போடிமெட்டு மலைச்சாலையில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

SCROLL FOR NEXT