தேனி

ஆசிரியர் பணிக்கான இணையவழி போட்டித் தேர்வுக்கு பயிற்சி முகாம்

DIN

தேனி அருகே முத்துத்தேவன்பட்டி, கம்பம் ஆகிய இடங்களில் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடைபெற உள்ள ஆசிரியர் நேரடி நியமனத்துக்கான போட்டித் தேர்வில் பங்கேற்பவர்களுக்கு, இணைய வழியில் தேர்வு எழுதப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
       இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரேணுகாதேவி கூறியது: ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், முதுகலை ஆசிரியர், உடற் கல்வி இயக்குநர் நிலை-1 ஆகிய பணிகளுக்கு நேரடி நியமனத்துக்காக செப்டம்பர் 27 முதல் 29-ஆம் தேதி வரை இணைய வழி போட்டித் தேர்வு நடைபெறுகிறது. 
      மாவட்டத்தில் முதன்முதலாக இணைய வழியில் போட்டித் தேர்வு நடைபெறுவதால், இத் தேர்வில் பங்கேற்க உள்ள தேர்வர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, முத்துத்தேவன்பட்டியில் உள்ள தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மெட்ரிக். பள்ளி, கம்பம் ஸ்ரீசக்தி விநாயகர் மெட்ரிக். பள்ளி ஆகிய இடங்களில் செப்டம்பர் 25, 26 ஆகிய தேதிகளில் காலை 10 முதல் மாலை 4 மணி வரை பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
     ஆசிரியர் தேர்வு வாரிய நேரடி நியமன போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு, இணைய வழியில் போட்டித் தேர்வு எழுதுவது குறித்து பயிற்சி பெறலாம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே விளாசல்

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

SCROLL FOR NEXT