தேனி

கூடலூர் நகராட்சியை முற்றுகையிடச் சென்ற பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை

DIN

தேனி மாவட்டம், கூடலூர் நகராட்சி அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிடச் சென்ற பொதுமக்களிடம், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.
        கூடலூர் நகராட்சி காஞ்சிமரத்துறையில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். முற்றிலும் விவசாயப் பகுதி என்பதால், நாள்தோறும் ஏராளமான விவசாயத் தொழிலாளர்கள் வயல்களுக்குச் சென்று வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதியில் பல ஆண்டுகளாக சாலை, தெருவிளக்கு, குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லையாம்.      இது குறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்காததால், பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை ஊர்வலமாகச் சென்று முற்றுகைப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். 
  இதனிடையே,  ஆணையர் (பொறுப்பு) புஷ்பலதா காஞ்சிமரத்துறை பகுதிக்குச் சென்று பொதுமக்களை சந்தித்து, விரைவில் அடிப்படை வசதிகளை செய்து தருவதாக உறுதியளித்தார். அதன்பேரில், பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT