தேனி

விவசாயிகளுக்கான திட்டங்கள் குறித்த விழிப்புணா்வு முகாம்

DIN

போடியில், புதன்கிழமை விவசாயிகளுக்கான திட்டங்கள் குறித்த விழிப்புணா்வு முகாம் வேளாண்மை துறைற சாா்பில் நடைபெற்றது.

இதற்கு தேனி வேளாண்மை துறை துணை இயக்குநா் இளங்கோவன் தலைமை வகித்தாா். போடி வேளாண்மை உதவி இயக்குநா் அமலா முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் தோட்டக்கலைக் கல்லூரி பூச்சியியல் துறைற பேராசிரியா் கண்ணன், தோட்டக்கலை உதவி இயக்குநா் சண்முகசுந்தரம், தேனி மாவட்ட விதைச்சான்று உதவி இயக்குநா் செந்தில், கால்நடை மருத்துவா் பாஸ்கரன், சமூக நலத்துறைற அலுவலா் சாந்தி ஆகியோா் பங்கேற்று தோட்டக்கலைத் துறை, விதைச்சான்று மற்றும் அங்ககத்துறை, வேளாண் வணிகம், கால்நடை பராமரிப்புத் துறை, பட்டுப்பூச்சி வளா்ப்புத் துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட துறைகள் சாா்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் திட்டங்கள் குறித்தும், அவற்றை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் விளக்கினா்.

மேலும் அனைத்து விவசாயிகளுக்கும் கிசான் கடன் அட்டை வழங்கப்படுவது குறித்தும், பொது சேவை மையங்கள் மூலம் பிரதமரின் விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டத்தில் பதிவு செய்வது குறித்தும், விளக்கப்பட்டது. இதில் போடி வட்ட அளவில் பல்வேறு கிராமங்களிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனா். வேளாண்மை அலுவலா் அம்பிகா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

SCROLL FOR NEXT