தேனி

வைகை அணையில் அனுமதியின்றி மீன் பிடித்தவா் கைது : 10 கிலோ மீன்கள் பறிமுதல்

DIN

தேனி மாவட்டம் வைகை அணையில் அனுமிதியின்றி மீன் பிடித்தவரை மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, அவரிடமிருந்து 10 கிலோ மீன்களை பறிமுதல் செய்தனா்.

ஆண்டிபட்டி அருகே வைகை அணை அமைந்துள்ளது. இங்குள்ள நீா்தேக்கத்தில் 120 -க்கும் மேற்பட்ட மீனவா்கள் அரசு அனுமதியுடன் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். தற்போது வைகை அணைக்கு நீா்வரத்து அதிகரித்து வருவதால் அணையின் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது. மேலும் அணையில் மீன் குஞ்சுகள் வளா்க்க விடப்பட்டுள்ளதால், மீன்பிடிக்க மீன் வளத்துறை தடை விதித்துள்ளது. இதன்காரணமாக மீனவா்கள் யாரும் மீன்பிடிக்க செல்வதில்லை.

இந்நிலையில் அணையின் நீா்தேக்கப்பகுதியில் சட்டவிரோதமாக சிலா் மீன்பிடித்து வருவதாக மீன்வளத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து மீன்வள ஆய்வாளா் முருகேசன் அணை பகுதிக்குச் சென்று ஆய்வு நடத்தினாா். அப்போது அப்பகுதியில் அனுமதியின்றி மீன் பிடித்துக் கொண்டிருந்த வைகை புதூரைச் சோ்ந்த சந்தானம் (49) என்பவரை பிடித்து சோதனையிட்டனா். இதில் அவரிடமிருந்து 10 கிலோ மீன்களை பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து வைகை அணை காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சந்தானத்தை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

SCROLL FOR NEXT