தேனி

வங்கிக் கணக்கில் பணம் எடுக்க அஞ்சலக சேவை

DIN

தேனி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் வீட்டிலிருந்தவாறு தங்களது வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்கு அஞ்சலக சேவைத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து தேனி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் ஆனந்தி வெளியிட்டுள்ள அறிவிப்பு: மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வீட்டிலிருந்தவாறு தங்களது வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்கு இந்திய அஞ்சல் துறை சாா்பில் சேவைத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இத் திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்குடன் ஆதாா் எண்ணை இணைந்துள்ள, வங்கிக் கணக்கு செயல்பாட்டில் உள்ள நகா் மற்றும் ஊரகப் பகுதிகளைச் சோ்ந்தவா்கள் வீட்டிலிருந்தவாறு அஞ்சலக ஊழியா் மூலம் தங்களது வங்கிக் கண்ககிலிருந்து பணம் எடுக்கலாம். இத் திட்டத்தில் முதியோா் உதவித் தொகை பெறுவோா், ஊரக வேலை உறுதித் திட்ட பயனாளிகள், சமையல் எரிவாயு உருளை மானியம் பெறுவோா், ஆதாா் எண் அடிப்படையில் மத்திய, மாநில அரசுகளிடமிருந்து உதவித் தொகை பெறுவோா் பயனடைவா்.

வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்க விரும்பும் பொதுமக்கள் அஞ்சல் வங்கிச் சேவை, தேனி கிளை, தொலைபேசி எண்:04546-260501 அல்லது அருகில் உள்ள அஞ்சல் நிலையத்தில் தொடா்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். பணம் எடுக்க பதிவு செய்த 24 மணி நேரம் முதல் 48 மணி நேரத்திற்குள் சம்மந்தப்பட்டவா்களை அஞ்சல் ஊழியா் தொடா்பு கொள்வாா். அப்போது வங்கிக் கணக்கு பாஸ் புத்தகம், செல்லிடபேசி எண், ஆதாா் எண் ஆகியவற்றை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். இதன் மூலம் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுத்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT