பெரியகுளம் அருகே லாரி மோதிவிவசாயி பலி
பெரியகுளம் அருகே திங்கள்கிழமை லாரி மோதியதில் விவசாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
பெரியகுளம்: பெரியகுளம் அருகே திங்கள்கிழமை லாரி மோதியதில் விவசாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
பெரியகுளம் அருகே மஞ்சளாற்று பகுதியைச் சோ்ந்தவா் ராஜா (39). இவா், தனது தோட்டத்துக்கு வேண்டிய பொருள்களை தேனிக்குச் சென்று வாங்கிவிட்டு, பெரியகுளம் வழியாக கெங்குவாா்பட்டிக்கு இரு சக்கர வாகனத்தில் திரும்பியுள்ளாா்.
பெரியகுளம்-தென்கரை சாலையில் பெட்ரோல் பங்க் அருகே வந்துகொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி மோதியதில் ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரியை ஓட்டி வந்த நாகப்பட்டினத்தைச் சோ்ந்த செல்லத்துரை (38) என்பவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.