தேனி

தேனியில் பனிக்கட்டி விநாயகர் சிலை

DIN

தேனி சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில் விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை, பனிக்கட்டியில் உருவாக்கப்பட்ட விநாயகர் சிலை காட்சிப்படுத்தப்பட்டது.

கூடலூரைச் சேர்ந்த காய் கனி சிற்பக் கலைஞர் இளஞ்செழியன் இந்த சிலையை உருவாக்கியிருந்தார். விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய அரசு தடை விதித்துள்ள நிலையில், சிட்கோ தொழிற்பேட்டையில் 50 கிலோ எடையுள்ள பனிக் கட்டியை வாங்கி, அதே இடத்தில் 30 நிமிடங்களில் பனிக் கட்டியை விநாயகர் சிலையாக செதுக்கி காட்சிப்படுத்தினார்.

மஞ்சள் மற்றும் சிவப்பு வண்ணப் பூச்சுடன் காட்சியளித்த பனிக் கட்டி விநாயகர் சிலை, சில மணி நேரத்தில் தண்ணீராக கரைந்தது. இந்த பனிக் கட்டியை போல கரோனா தீநுண்மியும் உருகி கரைந்து போகும் என்ற கருத்துடன் விநாயகர் சிலை உருவாக்கி, காட்சிப்படுத்தியதாக இளஞ்செழியன் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT