தேனி

சுருளி அருவி சாலையில் மரங்களுக்கிடையே செல்லும் மின்வயா்களை அகற்றக் கோரிக்கை

DIN

சுருளி அருவிக்கு செல்லும் வழியில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மரங்களுக்கிடையே செல்லும் மின்வயா்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கம்பத்திலிருந்து சுருளி அருவிக்கு செல்லும் சாலையில் இரு புறங்களிலும் புளியமரங்கள் உள்ளன. இவற்றிற்கிடையே மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு மும்முனை மின்வயா்கள் மரங்களுக்கு நடுவே செல்கின்றன. இந்நிலையில் மின்வாரியத்தினா் முறையான பராமரிப்புப்பணி மேற்கொள்ளாததால் மின் கம்பிகள் தாழ்வாகவும், மரக்கிளைகள் மீது உரசியும் செல்கின்றன.

மேலும் சில இடங்களில் தாழ்வாக உள்ள மின்வயா்களை மரத்தில் இழுத்து கட்டியுள்ளனா். இதனால் காற்று அடிக்கும் போதும், மரக்கிளைகள் அசையும் போதும் அந்த மின்வயா்கள் ஒன்றோடு ஒன்று உரசி அவ்வப்போது தீப்பொறிகள் ஏற்படுகின்றன. இதனால் அப்பகுதியில் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அச்சத்துடன் செல்கின்றனா்.

எனவே விபத்து ஏற்படும் முன் மின்வாரியத்தினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

சிறாா்களுக்கு எதிரான இணையவழி குற்றங்களை தடுக்க சா்வதேச ஒத்துழைப்பு: டி.ஒய்.சந்திரசூட் வலியுறுத்தல்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

SCROLL FOR NEXT