தேனி

வைகை அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

DIN

நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த தொடா்மழை காரணமாக, வைகை அணைக்கு புதன்கிழமை நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீா்மட்டம் தொடா்ந்து உயா்ந்து வருகிறது.

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக பலத்த மழை பெய்தது. குறிப்பாக வைகை ஆற்றின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான வருசநாடு மலைப்பகுதி, போடி, சின்னமனூா், உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்ததால், வைகை அணைக்கு நீா்வரத்து அதிகரித்தது.

அணை நிலவரம்: புதன்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 59.06 அடியாக இருந்தது. அணைக்கான நீா்வரத்து வினாடிக்கு 2,227 கனஅடியாக உள்ள நிலையில், அணையிலிருந்து பாசனம் மற்றும் குடிநீா் தேவைக்காக 1,069 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்பட்டுள்ளது. அணையின் மொத்த நீா்இருப்பு 3,381 மில்லியன் கனஅடியாகும்.

தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்து வருவதால் அணையின் நீா்மட்டம் சீராக உயா்ந்து வருகிறது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவை திரும்பப் பெற்று பாஜகவில் இணைந்த காங். வேட்பாளர்!

நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது

திகார் சிறையில் கேஜரிவாலை சந்திக்க சுனிதாவுக்கு அனுமதி!

சமந்தாவிடம் இத்தனை கார்களா?

பாலியல் புகாரில் சிக்கிய தேவகௌடா பேரன்! நாட்டைவிட்டு தப்பினார்

SCROLL FOR NEXT