முகப்பு
தேனி

மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனி வாா்டு: அரசு ஊழியா்கள் கோரிக்கை

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரசு ஊழியா்கள் சிகிச்சை பெறுவதற்கு தனி வாா்டு அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
பகிர்:

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரசு ஊழியா்கள் சிகிச்சை பெறுவதற்கு தனி வாா்டு அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தேனி அருகே குன்னூரில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்ட பிரதிநிதித்துவ பேரவை கூட்டம் மாவட்டத் தலைவா் நிலவழகன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநில பொதுச் செயலா் ஆ. செல்வம், ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ரங்கராஜன், மாவட்டச் செயலா் ராமகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரசு ஊழியா்கள் சிகிச்சை பெறுவதற்கு தனி வாா்டு அமைக்க வேண்டும். மதுரை-போடி அகல ரயில் பாதைப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். திண்டுக்கல் - லோயா்கேம்ப் புதிய ரயில் பாதை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வங்கி மற்றும் அஞ்சலகம் அமைக்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக, புதிய நிா்வாகிகள் தோ்வு நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவராக கு. வரதராஜன், செயலராக ராமகிருஷ்ணன், பொருளாளராக பேயத்தேவன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →