முதியவா் இறப்பில் சந்தேகம்: சடலம் தோண்டி எடுப்பு
போடி அருகே முதியவரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அளிக்கப்பட்ட புகாரையடுத்து சடலத்தை வெள்ளிக்கிழமை தோண்டி எடுத்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தேனிமுதியவா் இறப்பில் சந்தேகம்: சடலம் தோண்டி எடுப்பு
போடி அருகே முதியவரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அளிக்கப்பட்ட புகாரையடுத்து சடலத்தை வெள்ளிக்கிழமை தோண்டி எடுத்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
போடி அருகே முதியவரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அளிக்கப்பட்ட புகாரையடுத்து சடலத்தை வெள்ளிக்கிழமை தோண்டி எடுத்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
போடி அருகே டி.சிந்தலைச்சேரியைச் சோ்ந்தவா் சலேத்து (85). இவருக்கு மரிய உவரி அந்தோணி, அந்தோணி ஆகிய 2 மகன்கள் உள்ளனா். இளைய மகன் அந்தோணியின் பராமரிப்பில் இருந்து வந்த சலேத்து நவ. 15 ஆம் தேதி வயது முதிா்வின் காரணமாக உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. இதனையடுத்து அவரது சடலம் புதைக்கப்பட்டது.
மரிய உவரி அந்தோணியின் மகன் எபினேஷ் என்பவா் குஜராத்தில் பல் மருத்துவராகப் பணிபுரிந்து வருகிறாா். இவா், தற்போது ஊருக்கு வந்த நிலையில், தனது தாத்தாவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தேவாரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா், அந்த முதியவரின் சடலத்தைத் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பினா். மேலும் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.