தேனியில் புதிதாக 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி
தேனியில் புதிதாக 7 பேருக்கு திங்கள்கிழமை, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தேனியில் புதிதாக 7 பேருக்கு திங்கள்கிழமை, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16,804 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரில், ஒரே நாளில் 6 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதனால், கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 16,516 ஆக அதிகரித்துள்ளது.