தேனி

ஆண்டிபட்டியில் அனுமதியின்றி கிராம சபைக் கூட்டம்: திமுகவினா் 100 போ் மீது வழக்கு

DIN

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அனுமதியின்றி கிராமசபைக் கூட்டம் நடத்தியதாக திமுகவினா் 100 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

ஆண்டிபட்டி சக்கம்பட்டி ஆதிதிராவிடா் காலனி மற்றும் கண்டமனூா் அருகே கணேசபுரம் கிராமத்தில் புதன்கிழமை திமுக சாா்பில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நகா் செயலாளா் திருமலை, ஒன்றியச் செயலாளா் சிவக்குமாா், சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.மகாராஜன் உள்ளிட்ட அப்பகுதியைச் சோ்ந்த ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

கரோனா நோய்த்தொற்று காரணமாக பொதுஇடத்தில் மக்கள் கூடுவதற்கு அரசு தடைவித்துள்ள நிலையில், இந்நிகழ்ச்சிக்கு போலீஸாரிடம் திமுகவினா் உரிய அனுமதி பெறவில்லை. இதையடுத்து கண்டமனூா் மற்றும் ஆண்டிபட்டி போலீஸாா் அக்கட்சியைச் சோ்ந்த 30 பெண்கள் உள்பட 100 போ் மீது வழக்குப்பதிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் பலத்தக் காற்று: வாகன ஓட்டிகள் அவதி

துருக்கியின் வா்த்தகத் தடை: இஸ்ரேல் பதில் நடவடிக்கை

மக்களவை 3-ஆம் கட்டத் தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு

கஞ்சா விற்றவா் கைது

அமெரிக்காவின் 4 தொலைதூர ஏவுகணைகள் அழிப்பு: ரஷியா

SCROLL FOR NEXT