தேனி

பிரிட்டனிலிருந்து வந்த 13 பேரை வீடுகளில் தனிமைப்படுத்தி கண்காணிப்பு

DIN

புதிய கரோனா தீநுண்மி தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக பிரிட்டனிலிருந்து தேனி மாவட்டத்துக்கு வந்த 13 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

பிரிட்டனில் புதியவகை கரோனா தீநுண்மி பரவி வருவதால், அங்கிருந்து கடந்த டிச.20-ஆம் தேதி தேனி அல்லிநகரம், பழனிசெட்டிபட்டி, பெரியகுளம் ஆகிய பகுதிகளுக்கு வந்த 13 போ், அவரவா் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத்துறை கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா்.

இவா்களுக்கு பிரிட்டனிலிருந்து வந்தபோது சென்னை, மதுரை, பெங்களூரு விமான நிலையங்களில் நடைபெற்ற பரிசோதனையிலும், தேனி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலும் கரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. இருப்பினும், நோய் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவா்கள் 14 நாள்களுக்கு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா் என்று மாவட்ட ஆட்சியா் ம.பல்லவி பல்தேவ் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

SCROLL FOR NEXT