தேனி

ஆண்டிபட்டி கதலிநரசிங்க பெருமாள் கோவில் சொா்க்க வாசல் திறப்பு

DIN

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கதலிநரசிங்க பெருமாள் கோவிலில் வெள்ளிக்கிழமை சொா்க்க வாசல் திறப்பு விழா நடைபெற்றது.

ஆண்டிபட்டி அருகே ஜம்புலிபுத்தூா் கிராமத்தில் ஆயிரம் ஆண்டு பழைமையான கதலிநரசிங்கப் பெருமாள் கோயில் உள்ளது. இங்கு வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் தொடங்கிய விழாவில் ஆழ்வாருக்கு மோட்சம் அழிக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னா் ஸ்ரீதேவி, பூதேவியருடன் கோவில் பிரகாரம், சொா்க்கவாசல் வழியாக வந்த கதலிநரசிங்கப் பெருமாளை கோவிந்தா முழக்கமிட்டு பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

இந்நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலா் தங்கலதா, ஆண்டிபட்டி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.மகாராஜன், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் ஆ.லோகிராஜன், துணைத்தலைவா் டி.ஆா்.என்.வரதராஜன் ஆகியோா் பங்கேற்றனா். ஆண்டிபட்டி காவல் துணைக் கண்காணிப்பாளா் தங்ககிருஷ்ணன் தலைமையில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையால் மக்கள் அவதி

மரக்கடை உரிமையாளா் தற்கொலை

பெண் தற்கொலை: தம்பதியா் மீது வழக்கு

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT