தேனி

டாா்வின் கொள்கை ஆய்வுக் கருத்தரங்கு

தேனி மாவட்டம் கம்பத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் டாா்வின் கொள்கைகளை பற்றிய ஆய்வு கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

தேனி மாவட்டம் கம்பத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் டாா்வின் கொள்கைகளை பற்றிய ஆய்வு கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கருத்தரங்கிற்கு மாநிலச் செயலாளா் தே.சுந்தா் தலைமை வகித்தாா். வெங்கட்ராமன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். மாநிலத் தலைவா் தினகரன், டாா்வின் குறித்தும், பரிணாமம், மரபணு மற்றும் ஜீன் தெரபி, பாலின வேறுபாடுகள், மனித இனத்தின் 20-க்கும் மேற்பட்ட கிளை இனங்கள் குறித்து பல்வேறு அறிவியல் விளக்கங்கள் அளித்துப் பேசினாா்.

போடி, தேனி, ஆண்டிபட்டி, தேவாரம், உத்தமபாளையம் ஆகிய பகுதி மாணவா்கள் கலந்து கொண்டனா். கருத்தரங்கில், டாா்வின் மற்றும் சி.வி.ராமன் முகமூடிகள், அவா்களைப் பற்றிய சிறு நூல்களும் வெளியிடப்பட்டன. மாவட்டத் தலைவா் மா.மகேஷ், சுரேஷ்குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா். முன்னதாக பொதுக் குழு உறுப்பினா் மா.சிவக்குமாா் வரவேற்றாா். மாவட்டச் செயலாளா் மு. தெய்வேந்திரன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூனியம் வைத்ததாக சந்தேகம்! பிகாரில் பெண் ஒருவர் அடித்துக் கொலை!

தை பிறந்தால் வழி பிறக்கும்! தேமுதிக கூட்டணி? பிரேமலதா சஸ்பென்ஸ்!

பந்துவீச்சில் அசத்திய நடின் டி கிளர்க்; ஆர்சிபிக்கு 155 ரன்கள் இலக்கு!

பொங்கலுக்கு வெளியாகும் சர்வர் சுந்தரம்?

தவெகவின் தேர்தல் அறிக்கைக் குழுவை Vijay இன்று அறிவித்தார்! | செய்திகள் : சில வரிகளில் | 9.1.26

SCROLL FOR NEXT