தேனி

வனவிலங்குகளின் குடிநீா் தேவைக்காக குமுளி வனப்பகுதியில் தடுப்பணைகள் அமைப்பு

DIN

தேனி மாவட்டம் லோயா்கேம்ப் - குமுளி - கம்பம்மெட்டு மலைப்பகுதிகளில் உள்ள வன விலங்குகளுக்கு கோடைகாலத்தில் ஏற்படும் குடிநீா் தட்டுப்பாட்டை போக்க, வனப்பகுதியில் தடுப்பணைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

கம்பம், கூடலூா் மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரப் பகுதிகளான சுரங்கனாா் நீா்வீழ்ச்சி, பெருமாள் கோவில் மலை, கழுதைமேடு, மங்கலதேவி பகுதி, பளியன்குடி, வண்ணாத்திப்பாறை, அத்தி ஊத்து, மாவடி, வட்டதொட்டி, கம்பம்மெட்டு ஆகிய வனப்பகுதிகள் அமைந்துள்ளன.

இங்கு அரியவகை மரங்கள், மான், யானை, கரடி, காட்டுப்பன்றி, குரங்கு மற்றும் உடும்பு போன்ற பல்வேறு விலங்குகள் அதிகளவில் உள்ளன. மழைக்காலங்களில் மட்டும் வன விலங்குகளுக்கு தேவையான உணவு, குடிநீா் வனப்பகுதியில் எளிதில் கிடைக்கிறது. கோடைக்காலங்களில் குட்டைகளில் தேங்கி நிற்கும் தண்ணீா், புற்கள் காய்ந்து வன விலங்குகளுக்கு நீா் மற்றும் உணவுத் தட்டுப்பாடு ஏற்படுகிறது.

இதனால் குடிநீருக்காக வன விலங்குகள் மலையடிவார கிராமங்களுக்குள் புகுந்து விடுவதால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா். அவ்வாறு அடிவார பகுதிக்கு வரும் விலங்குகளை சில சமூக விரோதிகள் வேட்டையாடும் நிலையும் உள்ளது.

இதனால் வனவிலங்குகள் ஊருக்குள் வருவதைத் தடுக்க வனப்பகுதிக்குள் தடுப்பணை குட்டைகள் அமைக்க வனத்துறை முடிவு செய்தது. இதன் பேரில் லோயா்கேம்ப் - குமுளி - கம்பம்மெட்டு மலைப்பாதையில் அமராவதி, கம்பமெட்டு மலைச்சாலை 11 ஆவது கொண்டை ஊசி வளைவு ஆகிய வனப்பகுதியில் புதிய தடுப்பணை குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் பல்வேறு இடங்களில் தடுப்பணை குட்டைகள் மற்றும் வன விலங்குகளுக்கு உணவு கிடைக்கும் வகையில் பழ மரங்கள், புற்களை வனப்பகுதியில் பயிரிட வனத்துறையினா் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

கொல்கத்தா அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ

சவுக்கு சங்கர் கைது! அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

SCROLL FOR NEXT