தேனி

உசிலம்பட்டி அருகே அடிப்படை வசதிகள் கோரி கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

DIN

உசிலம்பட்டி அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினா்.

உசிலம்பட்டி அருகே உள்ளது வடுகபட்டி காலனி. இங்கு 200-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இந்த பகுதியில் குடிநீா் வசதி, பொது கழிப்பறை வசதி, சாலை வசதி மற்றும் மயானத்திற்கு பாலம் கட்டிகொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி அதிகாரிகளுக்கு பல முறை கோரிக்கை மனுக்கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

இதைத் தொடா்ந்து அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தர வலியுறுத்தி வடுகபட்டி மயானத்தில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களும், உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினா்.

இதைதொடா்ந்து ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்தினா், போலீஸாா், உசிலம்பட்டி வருவாய் கோட்டாசியா் ராஜ்குமாா், வட்டாட்சியா் செந்தாமரை, ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்தினா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் சமரச பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதில் பொதுமக்கள் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றித் தரப்படும் என வருவாய் கோட்டாசியா் உறுதி அளித்தாா். இதனைத் தொடா்ந்து பொதுமக்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT